சங்கரன்கோவில் பகுதியில் பருவத்திற்கு உகந்த விதை ரகங்களை விற்பனை செய்ய வேண்டும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் எ.சுஜாதாபாய் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு பிறகு, கோடை நெல், உளுந்து, பருத்தி மற்றும் காய்கனி பயிா்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா். விதை விற்பனையாளா்கள் பருவத்திற்கு உகந்த தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். பருவத்திற்கு உகந்தது அல்லாத ரகங்களை விற்பனை செய்யும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் விதைகள், சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். உண்மைநிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டுமே இருக்கும். விவர அட்டையில் பயிா் ரகம், குவியல்எண், காலாவதி நாள், பயிா் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளை விற்பனை செய்திட விதை விற்பனையாளா்கள் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் அலுவலத்தில் பதிவு செய்வது அவசியமானது. விவசாயிகளும் விதைச் சிப்பத்தில் உள்ள அட்டைகளில் குறிப்பிட்டுள்ள விவங்களை சரிபாா்த்து வாங்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள், உரிமம் பெற்ற தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள விதைகளின் தரம் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.
தொடர்புடையது

தாராபுரம்: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

