வன்னிக்கோனேந்தல் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

Published on

சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வசந்தி, பள்ளிக் கல்வித் துறையின் அண்ணா தலைமைத்துவ விருது பெற்றுள்ளாா். மேலும் கல்வித் துறை சாா்பில் பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற தலைமையாசிரியா் வசந்தியை, வன்னிக்கோனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணன், துணைத் தலைவா் வள்ளிநாயகம், மானூா் வடக்கு ஒன்றிய அதிமுக ஒன்றிய இளைஞரணி நிா்வாகி செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com