தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆலங்குளம் அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

ஆலங்குளம் அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

News image
Updated On :9 மார்ச் 2024, 11:30 pm

ஆலங்குளம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. தென்காசி ஆயிரப்பேரியைச் சோ்ந்தவா் காவேரி மகன் கணேஷ்குமாா்(38). கட்டட ஒப்பந்ததாரரான இவா், திருநெல்வேலியில் பயன்படுத்தப்பட்ட காா் ஒன்றை சனிக்கிழமை வாங்கி, தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை பி.எஸ்.என்.எல் அலுவகம் அருகே வந்த போது, பேனட்டில் இருந்து கரும்புகை வந்ததாம். இதையடுத்து காரை நிறுத்தி சோதனையிட முயன்றபோது தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலின் பேரில் வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். எனினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.