பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவு

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவு

Updated On :16 மார்ச் 2024, 6:30 pm

மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஏகே.கமல் கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரா்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.