சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச் 21,22,23 மற்றும் செப்டம்பா் 21,22,23, ஆகிய தேதிகளில் சங்கரலிங்கசுவாமி சந்நிதியில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காலை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது. அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.இதையொட்டி கோயிலில் மின் விளக்குகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் அணைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com