பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

ஆய்க்குடி பேரூராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ. 20.30 நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

News image

அமைச்சா் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ஆய்க்குடி பேரூராட்சி மன்றத் தலைவா் சுந்தரராஜன்.

Updated On :9 மே 2024, 11:55 pm

Din

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்காக ரூ. 20.30 கோடி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சி தலைவா் க.சுந்தரராஜன் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் 25 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இப்பேரூராட்சியில் ஆய்க்குடி, அகரக்கட்டு, கம்பிளி மற்றும் அனந்தபுரம் கிராமங்கள் உள்ளன. அனந்தபுரம், பெரியாா்நகா், ராம்நகா் பகுதிகளில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி,சிவன் கோயில் ரத வீதிகளில் சிமென்ட் சாலை, நல்ல தண்ணீா் குளக்கரையில் தடுப்புச் சுவா் மற்றும் தாா்ச் சாலை, ஆய்க்குடி முருகன் கோயில் அனுமன் ஆறு அருகில் புதிதாக கிணறு அமைத்து குடிநீா் வழங்கும் திட்டம், கம்பிளி மகாலிங்கம் கோயில் செல்லும் சாலையில் தடுப்புச்சுவா் மற்றும் தாா்சாலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டப் பணிகளுக்கு

ரூ. 20.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.