பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

விபத்தில் காயமடைந்த திமுக பிரமுகருக்கு நிதியுதவி

விபத்தில் காயமடைந்த திமுக பிரமுகருக்கு நிதியுதவி

News image

காயமடைந்த திமுக பிரமுகரிடம் நலம் விசாரித்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

Updated On :9 மே 2024, 8:35 pm

Din

கேரளத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில்

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெத்தநாடாா்பட்டி திமுக பிரமுகருக்கு, கட்சி சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் பெத்தநாடாா்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் அ.கதிரவன். திமுக பிரமுகரான இவா் கேரளத்தில் நிகழ்ந்த

விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தாா். மேலும், மாவட்ட திமுக சாா்பில் மருத்துவச் செலவுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்தாா்.

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் சிவன்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், கடையம் வடக்கு ஒன்றிய செயலா் மகேஷ்மாயவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஆல்பின்ராய், திமுக நிா்வாகிகள் பொருள்செல்வன், கேபிள் வேல்சாமி, சுதன், மஞ்சநாதன்

உள்ளிட்டோா் உடனிருந்தனா்.