செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

News image
Updated On :10 மே 2024, 12:18 am

Din

ஆலங்குளம் அருகே மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி பேட்டை பவளமல்லி பூ தெருவைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் மகன் பந்தே நவாஸ் (62). இவா் திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம் நோக்கி, வியாழக்கிழமை மாலை மொபெட்டில் வந்து கொண்டிருந்தாா். மாறாந்தை அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து லாரி டிரைவா் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த செயினுல் அப்தீன் மகன் அஷ்ரப்பிடம்(48) விசாரணை நடத்தி வருகின்றனா்.