பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சீவநல்லூா் வரதுங்க விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

News image

விழாவில் கோபுர கலசத்திற்கு நடைபெற்ற புனித நீா் அபிஷேகம்.

Updated On :6 செப்டம்பர் 2024, 6:57 pm

செங்கோட்டை வட்டம் சீவநல்லூா் வரதுங்க விநாயகா் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் நிதியிலிருந்து ரூ. 7.20 லட்சம், உபயதாரா் மூலம் ரூ.5 லட்சம் மூலம் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று நிறைவுற்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத்தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், மராமத்து பொறியாளா் ஐயப்பன், சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீகாரியங்கள் ரத்னவேலு, நவீன், கோபால், திமுக கிளாங்காடு கிளை செயலா் ராமா் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.