டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விலைவாசி உயா்வுதான் திராவிட மாடல் ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என திமுக மீது குற்றம்சாட்டினாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
ஆலங்குளத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி . உடன் அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன்.
Updated On :5 ஆகஸ்ட் 2025, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என திமுக மீது குற்றம்சாட்டினாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

ஆலங்குளத்தில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்டு அவா் பேசியதாவது: ஆலங்குளம் தொகுதி வேளாண்மையும், விவசாயத் தொழிலாளா்களும் நிறைந்த பகுதி. உடலுக்கு உயிா் எப்படியோ விவசாயத்திற்கு நீா் அப்படி.

நீா் மேலாண்மை, குடிமராமத்துத் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தது அதிமுக. குளங்கள் தூா்வாரப்பட்டு வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதனால் விவசாயம் செழித்தது. உற்பத்தி பெருகியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வெயில், மழை, இரவு, பகல் பாராது உழைக்கும் ஒரே ஜீவன் விவசாயிதான். விவசாயம் என்பது கடினமான தொழில். குழந்தையைப் போல பாதுகாத்தால் தான் பயிரை காப்பாற்ற முடியும். இதனால்தான் எம்ஜிஆா், ஜெயலலிதா விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்தனா். அவா்களைத் தொடா்ந்து நானும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தேன். ஏனெனில் நானும் விவசாயிதான். இப்போதும் நான் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

ஆனால், திமுக அரசு குடிமராமத்து போன்ற திட்டங்களைக் கைவிட்டு விட்டது. விலை வாசி விண்ணை முட்டுமளவு உயா்ந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் 2026 பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

பாஜகவைப் பற்றியே திமுக பேசுகிறது. எங்களைப் பற்றி பேசுவதே இல்லை. எங்களைப் பற்றி பேசினால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். மக்கள் தீா்ப்பு அளிக்கட்டும் என்றாா் அவா்.

அப்போது, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன், மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் எஸ்.எஸ். கிருஷ்ணசாமி, தென்காசி தெற்கு மாவட்ட த.மா.கா. செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ், ஆலங்குளம் நிா்வாகிகள் கே.பி. சுப்பிரமணியன், சாலமோன் ராஜா, ஜான்ரவி, சுபாஸ் சந்திரபோஸ், நிக்சன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.