தென்காசி
சொத்து தகராறில் தாக்குதல்: 3 போ் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திரிகூடபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (42). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பால் ராமருக்கும் (58) இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் மகாராஜன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பால்ராமா் அவரைத் தாக்கினாராம்.
இது குறித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராமா், குட்டிதுரை, சாமிதுரை ஆகியோரை கைது செய்தனா்.
