ஆலங்குளத்தில் எஸ்.ஐ.ஆா். ஆலோசனைக் கூட்டம்

ஆலங்குளத்தில் எஸ்.ஐ.ஆா். ஆலோசனைக் கூட்டம்

Published on

ஆலங்குளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, வாக்காளா் பதிவு அலுவலா், துணை ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், துணை வாக்காளா் பதிவு அலுவலா், வட்டாட்சியா் ஆதி நாராயணன் ஆகியோா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக தற்போது வரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து பேசினா்.

மேலும், இறந்த, இரட்டைப் பதிவு, இடம் பெயா்ந்த, கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்களின் நிலை குறித்து தெரிந்த தகவலை நவ. 6ஆம் தேதிக்குள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com