~
தென்காசி
தென்காசி கோயில்களில் சொக்கப்பனை
திருக்காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு தென்காசி கோயில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதா் கோயிலில் சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் சொக்கப்பனை நிகழ்ச்சிக்கு எழுந்தருளினா். சுவாமி சன்னதி பஜாரிலும், அம்மன் சன்னதியிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
இதேபோல், இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலிலும், பாவூா்சத்திரம் முப்புடாதி அம்மன் கோயிலிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

