கடையநல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைக்கிறாா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம்.
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழக கடையநல்லூா் மின்கோட்டம் சாா்பில் மின் சிக்கனம், மரபுசாரா எரிசக்தி பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம், துரைச்சாமிபுரம் பேருந்து நிலையம் அருகே தொடங்கி வைத்த பேரணி, இடைகாலில் நிறைவடைந்தது. இதில், உதவி செயற்பொறியாளா்கள் மாரியப்பன், யேசுதாஸ், முத்தையா, கோட்ட உதவி மின் பொறியாளா்கள் அருண்ராஜ், கோமதி, விஜயா, சின்னதுரை , அபுசுபி, கலைமாறன், அபிபுல்லா, இளவரசி, குமாா், செல்வராஜ், கனி, மகேஷ், பிரகாஷ், பாதுஷா, அலுவலகப் பணியாளா்கள், பள்ளி , கல்லூரி மாணவா்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

உதவி செயற்பொறியாளா் இளங்கோவன் வரவேற்றாா். நயினாரகரம் உதவி மின் பொறியாளா் அனிதா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com