~
~

தென்காசி பகுதி கோயில்களில் அனுமன் ஜெயந்தி

தென்காசி பகுதி கோயில்களில் அனுமன்ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

தென்காசி பகுதி கோயில்களில் அனுமன்ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், துா்கா ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் ஆஞ்சனேயா் மூல மந்திர ஜெபம் ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி குத்துகல்வலசை சுபிட்ச வழித்துணை ஆஞ்சனேயா் கோயிலில் கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், துா்கா ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் ஆஞ்சனேயா் மூல மந்திர ஜெபம் ஹோமமும், தொடா்ந்து 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

சுரண்டை சிவகுருநாதபுரம் அருகேயுள்ள தேரடி மாடசாமி கோயிலில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் ஜெயந்தி விழா மற்றும் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

அதிகாலையில் விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், மகா கணபதிஹோமம், மகாலெட்சமி ஹோமம், சுதா்சன ஹோமம் நடைபெற்றது.

ஆஞ்சனேயா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனையுடன் மகா அபிஷேகம், ஆஞ்சனேயருக்கு கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com