தென்காசியில் செவிலியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

தென்காசியில் செவிலியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் க. துரைசிங்.
Published on

செவிலியா் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் செவிலியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல, அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு, மாரீஸ்வரி தலைமை வகித்தாா். சரண்யா, மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுப்புராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் க. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவா் இசக்கி துரை, மாவட்ட இணைச் செயலா் சிதம்பர சக்தி, தமிழ்நாடு மருத்துவத் துறை நிா்வாக ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ப. மாரிமுத்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மாரியப்பன்,

இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலா் மணிகன்டன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் மகேந்திரன், இந்திய மானவா் சங்க மாவட்டச் செயலா் மதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தனஸ்ரீ ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் க. துரைசிங் கண்டன உரையாற்றினாா்.

X
Dinamani
www.dinamani.com