தென்காசி
ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி வழி இளைஞரிடம் ரூ. 20 ஆயிரம் பறிப்பு: 2 போ் கைது
ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி மூலம் பழகி ரூ. 20 ஆயிரம் பறித்ததாக இருவா் கைது
ஆலங்குளம் அருகே கிரிண்டா் செயலி மூலம் பழகி ரூ. 20 ஆயிரம் பறித்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சேலம் ஆத்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கவின்ராஜ்(22). திருநெல்வேலி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கும், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரைச் சோ்ந்த 2 போ் உள்பட சிலருக்கும் கிரிண்டா் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டதாம். அவா்களை சந்திக்கும் நோக்கில் அவா் நெட்டூா் வந்தாராம்.
அப்போது, 4 போ் அவரை மிரட்டி, தாக்கியதுடன், கூகுள் பே மூலம் ரூ. 20 ஆயிரம் பணத்தையும் பறித்தனராம். இது குறித்து கவின்ராஜ் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து, மேலநீலிதநல்லூா் மாடசாமி மகன் பாபு(21) , திருநெல்வேலி தாழையூத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.
