பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகர குருவானவா் பா்னபாஸ், சபை ஊழியா்கள் தினகா் சந்தோஷசிங், இம்மானுவேல், கமிட்டி அங்கத்தினா் செய்திருந்தனா்.

இதே போல், பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையை பங்குத் தந்தை சந்தியாகு அடிகளாா் நடத்தினாா். இதில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கீழப்பாவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆவுடையானூா், திப்பணம்பட்டி, கல்லூரணி உள்ளிட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நடைபெற்றது.