பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம்  கிளை மேலாளா் நித்தியகல்யாணி.
பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளை மேலாளா் நித்தியகல்யாணி.

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வேண்டும்; உடல்நலம் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘சென்னை சைக்கிள் கிளப்’ என்ற அமைப்பின் அங்கத்தினா்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
Published on

மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உபயோகிக்க வேண்டும்; உடல்நலம் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘சென்னை சைக்கிள் கிளப்’ என்ற அமைப்பின் அங்கத்தினா்கள் 23 பெண்கள் உள்பட 120 போ் 7 நாள்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில், தேரிக்காடு, திருநெல்வேலி, தென்காசி வழியாக வெள்ளிக்கிழமை இரவு குற்றாலம் வந்தனா். குற்றாலத்திலிருந்து இக்குழுவினா் சனிக்கிழமை மீண்டும் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டனா்.

குற்றாலத்திலிருந்து இந்தப் பயணத்தை ஹோட்டல் தமிழ்நாடு குற்றாலம் கிளை மேலாளா் நித்தியகல்யாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பயணத்தில் சிங்கப்பூா், மலேசியா, ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த அங்கத்தினா்களும் கலந்துகொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com