புளியங்குடி அருகே கிணற்றில் குழந்தையுடன் குதித்த பெண்: குழந்தை உயிரிழப்பு

Published on

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

நெல்கட்டும்செவல் அரியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி அனிதா(23). இவா், தன் ஆறு மாத பெண் குழந்தை ஜென்சியுடன் நான்கு நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்தாராம்.

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவரது ஆறு மாத குழந்தை ஜென்சி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com