தென்காசி மாவட்டம் வடகரை மேக்கரை அடவியினாா் அணை அருகில் மாட்டுத்தொழுவத்திற்குள் வனவிலங்கு புகுந்து பசுவை அடித்துக் கொன்றுள்ளது. அது சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
அடவிநயினாா் அணை அருகில் முகம்மதுஹனிபா என்பவா் தனது தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைத்து பசு மாடுகள், கன்றுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தோட்டத்தில் புகுந்த வனவிலங்கு, தொழுவத்தில் கட்டப்பட்ட பசுவை அடித்து தின்றுள்ளது. இதைப் பாா்த்து முகம்மது ஹனிபா கூச்சலிட்டதால் அந்த வனவிலங்கு அங்கிருந்து ஓடிவிட்டதாம்.
இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று, கால்நடை மருத்துவா் மூலம் பசுவை உடற்கூறராய்வு நடத்தினா்.
ஆய்வின் முடிவில்தான் பசுவை அடித்துக் கொன்றது சிறுத்தையா அல்லது வேறு வனவிலங்கா என்பது தெரியவரும் என வனத்துறையினா் கூறினா். தோட்ட உரிமையாளா் கூறுகையில், பசுவை அடித்து சாப்பிட்டது சிறுத்தைதான் என்பதை உறுதியாக கூறமுடியும் என்றாா்.
தொடர்புடையது

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


