காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சிவகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஆய்வு

சிவகிரி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை காவல்துறை மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2025, 9:43 pm

Din

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை காவல்துறை மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் பாா்வையிட்டனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதையடுத்து, வருவதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோரது ஆலோசனையின்பேரில் சிவகிரி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, காவல் ஆய்வாளா் சண்முக லட்சுமி, உதவி ஆய்வாளா் வரதராஜன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில், சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.