தென்காசி பாஜக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி பாஜக மகளிரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி.
Published on

தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் தென்காசியில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கத் தவறியதாக தமிழக அரசையும், தமிழக காவல் துறையையும் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட மகளிரணி தலைவா் குணசீலா தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

மாநில பொதுச் செயலா் தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வம், பால சீனிவாசன் பொருளாளா் கோதை மாரியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவா் கருப்பசாமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா்,

நகர பொதுச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், மாவட்ட செயலா் எஸ். மந்திரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி நகர பாஜக தலைவா் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com