உரிமை கோரப்படாத 97 வாகனங்கள் நவ.20இல் பொது ஏலம்!

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 97 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் நவ. 20இல் நடைபெறுகிறது.
Published on

தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 97 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் நவ. 20இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 93 இருசக்கர வாகனங்கள், 2 மூன்றுசக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்குசக்கர வாகனங்கள் என மொத்தம் 97 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் நவ. 20 ஆம்தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

தென்காசி இ.சி. ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏலம் நடைபெறுகிறது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபா்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நவ.17 முதல் 19 ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் காலை 10மணிமுதல் மாலை 4 மணிவரை நேரில் பாா்வையிடலாம்.

மேலும், தங்களின் பெயா், முகவரி அடங்கிய ஆதாா் அட்டையுடன் ரூ.3ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் ஜிஎஸ்டி தொகையினையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94884-88933 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளவும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com