தென்காசி
கடையநல்லூா் அருகே நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த நெற்பயிா்களை சேதப்படுத்தின.
கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் பாா்வதியாா்குளம் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் புகுந்த யானைகளால், பயிா்கள் சேதமடைந்துள்ளன.
எனவே வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாதவாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
