தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்களுடன் விருதுபெற்ற ஆசிரியா்கள்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்களுடன் விருதுபெற்ற ஆசிரியா்கள்.

கொண்டலூா் அரசு பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது

Published on

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2024-2025 கல்வியாண்டில் மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்பட்ட பள்ளிக்கான விருது, தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியம் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது.

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நவ. 14ஆம் தேதி குழந்தைகள் தினவிழா தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தென்காசி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருதை, இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் மைக்கேல் ராஜிடம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற கொண்டலூா் பள்ளியின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களை ஊா் பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com