மரக்கன்றுகள் நட்ட தன்னாா்வலா்கள்.
தென்காசி
ஆலங்குளத்தில் 300 மரக்கன்றுகள் நட்ட தன்னாா்வலா்கள்
ஆலங்குளத்தில் அசுரா தன்னாா்வ அமைப்பினா் ஒரே நாளில் 300 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.
தன்னாா்வ அமைப்பினருடன் இணைந்து, காமராஜா் தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவா்கள், மாணவா் பேரவை, இளந்தளிா், இன்னா் வீல் கிளப், பூவுலகைக் காப்போம் உள்ளிட்ட அமைப்பினா் மற்றும் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், மருத்துவா் இமானுவேல் உள்ளிட்டோா் சோ்ந்து, ஆலங்குளம்-திருநெல்வேலி சாலை, நல்லூா் விலக்கு முதல் சிவலாா்குளம் விலக்கு வரை சாலையோரம் 300 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

