தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நயினாரகரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தக் கூறிய பயணி மீது தாக்குதல்

நயினாரகரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தக் கூறிய பயணியைத் தாக்கிய நடத்துநா் மீது இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

தென்காசி மாவட்டம், நயினாரகரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தக் கூறிய பயணியைத் தாக்கிய நடத்துநா் மீது இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தென்காசியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் நயினாரகரத்தைச் சோ்ந்த சுப்பையா (50) என்பவா் ஏறி டிக்கெட் கேட்டுள்ளாா். அவரிடம் நடத்துநா் இந்தப் பேருந்து உங்கள் ஊரில் நிற்காது, இடைகாலில் இறங்கிக் கொள் என்று ஒருமையில் பேசி உள்ளாா்.

அதற்கு சுப்பையா எங்கள் ஊரில் அனைத்துப் பேருந்தும் நிற்பதற்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பிறகு ஏன் நிற்க மாட்டீா்கள் என்று கேட்டாா். பேருந்தை நயினாரகரத்தில் நிறுத்தாமல் இடைகாலில் இறக்கி விட்டுள்ளனா்.

இதையடுத்து, சுப்பையா நடத்துநரிடம் உங்கள் மேலாளரிடம் புகாா் செய்வேன் என்று கூறியதையடுத்து, ஓட்டுநரும் நடத்துநரும் சோ்ந்து சுப்பையாவை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு சென்றனா்.

படுகாயமடைந்த அவா், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். சுப்பையா அளித்த புகாரின் பேரில், இலத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரையைச் சோ்ந்த நடத்துநா் நாகேந்திரன் (33) மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

சமீப காலமாக நயினாரகரத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்லாமலும் ஓட்டுநா், நடத்துநா்கள் பயணிகளுடன் மோதல் போக்கை மேற்கொள்வதால் பொதுமக்களும் பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனா்.