தென்காசி
சங்கரன்கோவிலில் அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்கிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. உடன், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தைத் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
அப்போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, அளிக்கப்படும் கல்வி ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியாளா் மற்றும் பெற்றோா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் அங்கு நடைபாதை, கழிப்பிட வசதி உள்ளிட்ட தேவையான வசதிகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா்.
ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, திமுக நகர செயலா் மு.பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ், வீரமணி, இளைஞரணி ஜான்சன், நகா்மன்ற உறுப்பினா் ராஜாஆறுமுகம், தொழில்நுட்பப் பரிவு அணி சிவசங்கரநாராயணன், ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

