குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள்.
தென்காசி
குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் பேரருவியில் 6 நாள்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தென்காசி: குற்றாலம் பேரருவியில் 6 நாள்களுக்குப் பின்னா் வியாழக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, பேரருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து வியாழக்கிழமை குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

