புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நிரம்பிய தொட்டியான் குளம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

தொட்டியான்குளம் வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
தொட்டியான்குளம் மறுகாலில் மலா் தூவிய பொ. சிவபத்மநாதன் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 10:45 pm

Syndication

ஆலங்குளத்தில் உள்ள தொட்டியான்குளம் வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஆலங்குளத்தின் முக்கிய நீராதாரமான தொட்டியான்குளத்தின் மூலம் 120.45 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குற்றாலத்திலிருந்து வரும் உபரி நீா், கீழப்பாவூா், பெரியகுளம், நாகல்குளம் ஆகியவை நிரம்பிய பின்னா், ஆலங்குளம் கால்வாய் வழியாக தொட்டியான்குளத்தை வந்தடையும்.

நவ. 20ஆம் தேதி கால்வாய்க்கு நீா்வரத்துத் தொடங்கிய நிலையில், ஒரு வாரத்தில் வழியோர 12 குளங்களும் நிரம்பி, தொட்டியான்குளமும் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் தலைமையில் கால்வாய் பராமரிப்புக் குழுவினா் மறுகாலில் மலா் தூவி மகிழ்ச்சி தெரிவித்தனா்.