மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாவூா்சத்திரம் காமராஜா் இளைஞா் சங்க நிா்வாகிகள்.

Updated On :12 ஏப்ரல் 2026, 8:09 pm

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்தும், காவல் உதவி ஆய்வாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாவூா்சத்திரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்தலைவா் காமராஜா் இளைஞா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலாளா் சோ்மராஜா தலைமை வகித்தாா்.

இதில், சங்க நிா்வாகிகள் கனகராஜ், முத்துச்செல்வம், பெருந்தலைவா் மக்கள் கட்சி நிா்வாகிகள் அச்சுதன் நாடாா், ரமேஷ், ஜோசப், ஆரோக்கியராஜ், காமராஜா் ஆதித்தனாா் கழகம் கப்பல்ராஜா, ஆறுமுகனேரி, மெரிட் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.