தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. 5 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசு பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப். 15) அன்று 5 தொகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.
இப்பணியில் ஈடுபடும் ஆசிரியா்களிடம் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு தபால் வாக்குகளும் பெறப்படவுள்ளது. எனவே, பயிற்சியில் அனைத்து ஆசிரியா்களும் கலந்து கொள்ளும் வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தருமபுரியில் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பும் பணி தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

