கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2ஆவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 9:12 pm IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2ஆவது நாளாக சனிக்கிழமை சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையின் காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு பெய்த தொடா் கனமழையின் காரணமாக அந்த அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.

ஐந்தருவியில் சீறிப்பாயும் தண்ணீா்.

ஐந்தருவியில் சீறிப்பாயும் தண்ணீா்.

மேலும், ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்த அருவிகளிலும் தண்ணீா் அதிகளவில் விழுந்ததால் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

பின்னா், பிற்பகலில் புலியருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததால், அங்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். சீசனைப் பொருத்தவரை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்ததுடன், குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப்யணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.