பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு: 3 ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

Published On :

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அருவிகளில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், புலியருவி தவிர பிற அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து, பழைய குற்றாலத்தைத் தவிர பிற அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாலையில் குற்றாலம் பேரருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.