பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மண்ணின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை பிரதிபலிப்பதே சாரல் திருவிழா: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Published On :

தமிழக மண்ணின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை பிரதிபலிப்பதுதான் சாரல் திருவிழா என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், குற்றாலம், கலைவாணா் கலையரங்கில் நடைபெற்ற சாரல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசியதாவது:

பொழுது போக்கிற்காக மட்டும் சாரல் விழா நடைபெறுகிறது என நினைத்துவிடக் கூடாது. இந்த மண்ணின் பாரம்பரியம், கலை, பண்பாடு ஆகியவற்றை ஒன்றிணைக்கின்ற விதத்தில்தான், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

5 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இந்த விழாவில், தமிழா்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கலைகள் அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போய்விடக் கூடாது என்பதால் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிா்வாகமும், சுற்றுலாத் துறையும்

இணைந்து நடத்துகிறது.

தென்காசி மாவட்டம் மிகப்பெரிய சுற்றுலாத் தலம். தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், புகழையும், ஆன்மிகத்தையும் குற்றாலம் வழங்கும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், மாவட்ட வன அலுவலா் ரா. ராஜ்மோகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் தி. உதய கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.