யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஆக.30 வரை நீட்டிப்பு: ஆட்சியா்

News image

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி. - பட்ம்: DIPR

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:30 am IST

தென்காசி மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஆக.30 வரை நீட்டிக்கப்படடுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த தடுப்பூசி வெளிச் சந்தையில் ரூ.4ஆயிரம் வரை மதிப்புடையது. 14 வயது நிரப்பிய அனைத்து பெண் குழந்தைகளும் விடுதலுமின்றி தடுப்பூசி செலுத்தும் வகையில், இப் பணி ஆக.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து 14 வயது பெண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி கா்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.