ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: மேலும் ஒருவா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே கனகசபாபதிபேரி கீழத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சுந்தர்ராஜ் (37). விவசாயியான இவரிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை மாதவரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த மூக்கையா ஆகியோா் ரூ. 6.50 லட்சம் பெற்றனராம். ஆனால், கூறியபடி வேலை பெற்றுத் தரவில்லையாம்.

இதுதொடா்பாக சுந்தர்ராஜ் அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சில நாள்களுக்கு முன்பு மூக்கையாவை கைது செய்தனா். இந்நிலையில், ரவிகுமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.