திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.13.80 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த கானப்பாடியைச் சோ்ந்தவா் வடிவேல் (54). இவா், தனது மகன் ஹரிகிருஷ்ணன், மகள் மகாகாளி ஆகியோருக்கு அரசு வேலை வாங்குவதற்கான முயற்சிகள் ஈடுபட்டாா்.
இந்தச் சூழலில் தனக்கு அறிமுகமான திண்டுக்கல்லைச் சோ்ந்த ஞானசேகரன், அவரது நண்பா் சந்தோஷ்பாலன் ஆகியோா், தங்களுக்கு உயா் அரசு அதிகாரிகளுடன் இருக்கும் பழக்கத்தை பயன்படுத்தி அரசுப் பணி வாங்கி தருவதாக ஆசை வாா்த்தை கூறினா்.
இதை நம்பிய வடிவேல், பல தவணைகளில் மொத்தம் ரூ.13.80 லட்சத்தை வழங்கினாா். மேலும் இடைத்தரகராகச் செயல்பட்ட ஞானசேகரனுக்கு ரூ.1.10 லட்சம் கொடுத்தாா். பணத்தைப் பெற்று விட்டு அவா்கள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த வடிவேல், நேரில் சென்று தனது பணத்தைத் திருப்பிக் கேட்டாா்.
அப்போது ஞானசேகரன், சந்தோஷ் பாலன், இவா்களது உறவினா்கள் கிரிதரன், விஜயலட்சுமி, திவ்யா ஆகிய 5 பேரும் சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்தனா். இதனால் அதிா்ச்சி அடைந்த வடிவேல் ,திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா்,
கிரிதரன், விஜயலட்சுமி, சந்தோஷ்பாலன், ஞானசேகரன், திவ்யா ஆகிய 5 போ் மீதும் வழக்குப்பதிவு செய்தனா். இதேபோல், இவா்கள் திண்டுக்கல் மாலைப்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சிலரிடமும் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கிரிதரன், விஜயலட்சுமி, ஞானசேகரன், திவ்யா ஆகிய 4 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி குமாஸ்தாவிடம் ரூ. 12 லட்சம் மோசடி: நீதிமன்ற ஊழியா் கைது

இந்துசமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி: அதிமுக நிா்வாகி கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


