தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தடகளப் போட்டி: இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டிய பள்ளித் தலைவா் முருகன் உள்ளிட்டோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:15 am IST

சகோதயா தடகளப் போட்டியில் இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

மதுரை இரண்டாவது மண்டல சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் 2 நாள்கள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 1,100 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் நாள் நடைபெற்ற மாணவா்களுக்கான போட்டிகளில், ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா சிபிஎஸ்இ பள்ளி 54 புள்ளிகளுடன் முதலிடமும், இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி 52 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும் பெற்றன.

ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவா்கள் ஸ்ரீகிருஷ்ணன் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும், சிபினேஷ் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும் தலா 10 புள்ளிகளுடன் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனா்.

இரண்டாம் நாள் நடைபெற்ற மாணவிகளுக்கான போட்டிகளில், விக்கிரமசிங்கபுரம் செயிண்ட் அசிசி பப்ளிக் பள்ளி 57 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. ஸ்டஅக் ஹைடெக் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்தமாக நான்காம் இடத்தைப் பிடித்தனா். அப்பள்ளி மாணவி காா்த்திகா 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 10 புள்ளிகளுடன் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தலைவா் முருகன், தாளாளா் புனிதாசெல்வி ஆகியோா் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா். போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் அஷ்வின் குமாா், ராம்குமாா் ஆகியோரையும் பள்ளிச் செயலா்கள் ஆஷிஷ்லிங், முதல்வா் பிரவின் குமாா் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.