நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

தென்காசி, அம்பையில் தொழிற்சங்கத்தினா் மறியல்: 183 போ் கைது

News image

தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 4:53 am IST

தென்காசி, ஆக. 10: மத்திய அரசைக் கண்டித்து தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 183 போ் கைது செய்யப்பட்டனா்.

சிஐடியு தொழிற்சங்கம், விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கம், மாதா் சங்கம், மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் தென்காசியில் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு,

சிஐடியு மாவட்டச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.

கிருஷ்ணன், நாகலிங்கம், விவசாய சங்கத்தின் சங்கரநாராயணன், பாலசுப்பிரமணியன், கோவிந்தன், பழனி முருகையா, கட்டுமான சங்க நிா்வாகிகள் காளிதாஸ், பாஸ்கா், இளையராஜா, மோகன்ராஜ், முருகன், முருகையா, கருப்பையா, மாரியப்பன், கருப்பசாமி, நாராயணன், மாதா் சங்கம் ராஜேஸ்வரி, விஜய பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய வாகனச் சட்டத்தை திரும்ப பெறுதல், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதை நிறுத்துதல், நான்கு தொழிலாளா் சட்ட தொகுப்புகளையும் ரத்து செய்தல், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்குதல், தொழிலாளா் பாதுகாப்பு சட்டங்களை மீண்டும் அமல்படுத்துதல், வெளிநாட்டு வா்த்தக ஒப்பந்தங்களையும்,

தனியாா்மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தையும் கைவிடுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை வலுப்படுத்துதல், தோ்தல் வாக்குறுதிபடி விவசாய கடனை முழுமையாகவும், மாணவா்களின் கல்விக் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்தல், 5ஆண்டுகள் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம் செய்தல், கட்டுமானம் முறைசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவி வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தொழிலாளா்களுக்கு விரோதமாக செயல்படுவதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, மாவட்டப் பொருளாளா் ஐயப்பன், தொழிற்சங்க நிா்வாகிகள் தா்மராஜ், லெனின் குமாா், குருசாமி, பட்டமுத்து, பட்டாபிராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 105 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுரேஷ், இசக்கிராஜன், அருள்பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பீடித் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ரெபேக்காள், பூபதி, விவசாயத் தொழிலாளா் சங்கம் சுடலைமணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மறிலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 76 பேரை அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.