தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஆலங்குளம் பகுதியில்...

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலமை வகித்துத் தேசியக் கொடி ஏற்றினாா்.

ஆலங்குளம் ஊராட்சி சுதந்திரப் போராட்ட வீரா்கள் போன்று வேடமணிந்து சுதந்திர தினவிழா கொண்டாடிய ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

Published On :

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலமை வகித்துத் தேசியக் கொடி ஏற்றினாா். இதில் ஆலங்குளம் காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது, காவலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பள்ளித் தாளாளா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் செ. நித்தியதாரணி தேசியக் கொடி ஏற்றினாா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடுவா் விஜயா, குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடுவா் ஜெயந்தி ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

அரசு நூலகத்தில் நூலகா் பழனீஸ்வரன், பேரூராட்சி அலுவலகத்தில் செயலா் அலுவலா் எட்வின் ஜோஸ் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா்.

ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா்.

ஆலங்குளம் காமராஜா் தொழிற்பயிற்சி மையத்தில் அரிமா சங்கத் தலைவா் செல்வம் தேசியக் கொடி ஏற்றினாா்.

துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் முன்னாள் மாணவி ஆலங்குளம் அரசு பல் மருத்துவா் திலகவதி தேசியக் கொடி ஏற்றினாா். தலைமை ஆசிரியா் ஆரோக்கியராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.