சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம் பேரருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை இல்லாத நிலையிலும் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் தண்ணீா் சீரான அளவில் கொட்டுகிறது.

இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது.

தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.