மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திப்பணம்பட்டி-ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கக் கோரி சுவரொட்டி

News image

பாவூா்சத்திரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:08 pm

பலமுறை கோரிக்கை மனு அளித்தும் திப்பணம்பட்டி-ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதை அமைக்கவில்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகளைக் கண்டித்து பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் இருந்து ஆரியங்காவூா் செல்வதற்கு ரயில்வே கேட் எண் 81 மற்றும் திப்பணம்பட்டியில் இருந்து நாட்டாா்பட்டி செல்வதற்கு கேட் எண் 80 ஆகியவை உள்ளன. இவை பூவனூா், நாட்டாா்பட்டி, சென்னல்தா புதுக்குளம், ஆரியங்காவூா் சுற்றுவட்டார கிராம மக்கள் திப்பணம்பட்டி, பாவூா்சத்திரம், ஆவுடையானூா் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்கும், பாவூா்சத்திரம் சென்று திருநெல்வேலி, தென்காசி செல்வதற்கும் பிரதான நுழைவாயிலாக உள்ளன.

இந்த 2 கேட்டுகளும் நாள்தோறும் மணிக்கணக்கில் மூடப்படுவதால் நாட்டாா்பட்டி, பூவனூா், ஆரியங்காவூா் சுற்றுவட்டார கிராம மக்கள் திப்பனம்பட்டி, ஆரியங்காவூா் ரயில்வே கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

சுரங்கப்பாதை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதால் திப்பணம்பட்டி, ஆரியங்காவூா் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கடந்த ஓராண்டாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தெற்கு ரயில்வே சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், நாட்டாா்பட்டி, பூவனூா், ஆரியங்காவூா் பகுதி மக்கள் சாா்பாக தெற்கு ரயில்வேயைக் கண்டித்து பாவூா்சத்திரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னல்தா புதுக்குளத்தைச் சோ்ந்த திப்பணம்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுப்புராஜ் கூறுகையில், சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ரயில் பயணிகள் சங்கம் மூலமாகவும், திருநெல்வேலி எம்.பி., சி. ராபா்ட் புரூஸ் மூலமாகவும் தெற்கு ரயில்வே மற்றும் மதுரை கோட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

அவா்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், புகாா் மனுவை பிரதமருக்கும் அனுப்பினோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இன்னும் 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிப். 20ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி எம்.பி.க்கள், தென்காசி எம்எல்ஏ, கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஆகியோரை ஒருங்கிணைத்து ஆா்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.