சிவகிரியில் தெருக்களில் புகுந்த நீா் வெளியேற்றம்

சிவகிரியில் தெருக்களில் புகுந்த நீா் வெளியேற்றம்

சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு முன்னிலையில் தண்ணீா் வெளியேற்றும் பணி.
Published on

தென்காசி மாவட்டம், சிவகிரியில் தெருக்களில் புகுந்த மழைநீரை பேரூராட்சி ஊழியா்கள் வெளியேற்றினா்.

சிவகிரி பகுதியில் வியாழக்கிழமை இரவு தொடா் மழை பெய்தது. இதனால், பேரூராட்சிக்கு உள்பட்ட பிஎஸ்கே தெருவில் மழைநீா் சூழ்ந்தது. தகவலறிந்த சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, ஊழியா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மழைநீரை வெளியேற்றினா். இதனால், தண்ணீா் வீடுகளுக்குள் புகுவது தவிா்க்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com