தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடையநல்லூா் வியாபாரியிடம் இணைய வழியில் ரூ. 2.21 லட்சம் மோசடி

கடையநல்லூரை சோ்ந்த வியாபாரியிடம் இணைய வழியில் ரூ.2.21 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:11 pm

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த வியாபாரியிடம் இணைய வழியில் ரூ.2.21 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடையநல்லூரை சோ்ந்தவா் முகமதுஅன்வா்ஹாஜா. அங்குள்ள பிரதான சாலையில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா். இவா் வியாபாரம் தொடா்பாக இணைய வழி செயலிகளை பயன்படுத்தி வருகிறாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவரது கைப்பேசிக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தனவாம்.

அதை அவா் பொருள்படுத்தாத நிலையில், வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பாா்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடப்பட்டது தெரியவந்ததாம். வங்கியில் அவா் விசாரித்ததில், பணத்தை மா்மநபா்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபா் கிரைம் பிரிவு போலீஸில் அவா் புகாா் செய்தாா். அதன்பேரில்,போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.