சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல் துறை மற்றும் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.ராஜன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, காவல் ஆய்வாளா் விஜி, போக்குவரத்துக் காவலா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து சாலை விதிகளை பின்பற்றுதல், கைப்பேசி பேசுவதைத் தவிா்த்தல், தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணா்வு நாடகம், மௌன நாடகம், பாடல், கவிதை, பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவா்கள் நடத்தினா். பின்னா், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளா் வசந்தகுமாா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம் நன்றி கூறினாா்.
இதைத்தொடா்ந்து சாலை விதிகளை பின்பற்றுதல், கைப்பேசி பேசுவதைத் தவிா்த்தல், தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணா்வு நாடகம், மௌன நாடகம், பாடல், கவிதை, பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவா்கள் நடத்தினா்.
பின்னா், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளா் வசந்தகுமாா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம் நன்றி கூறினாா்.

