தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் எம்.புதிய பாஸ்கா், நிா்வாகிகள்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் எம்.புதிய பாஸ்கா், நிா்வாகிகள்.

தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தோ்வு

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை வளாகத் தோ்வு நடைபெற்றது.
Published on

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை வளாகத் தோ்வு நடைபெற்றது.

சென்னை, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சாா்பில் வளாகத் தோ்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனம் சாா்பில் அந்தோணி லூா்து ராஜ், ஜெகன்,சிவகுமாா், சாகு, சச்சிதானந்த மொஹைதி, சுந்தர கண்ணன், மெல்வின், லோகேஷ் குமாா், ஸ்ரீனிவாசன், விவேக், மகேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு தோ்வை நடத்தினா்.

வளாகத் தோ்வில் 4 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 64 மாணவா்கள் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 16 மாணவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 2.80 லட்சம் சம்பளத்துக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

தோ்வு பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் எம்.புதியபாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா், முதல்வா் சேவியா் இருதயராஜ், பொது மேலாளா் மணிகண்டன் அனைத்துத் துறைத் தலைவா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com