கடையநல்லூா் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா
கடையநல்லூா் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். ஆணையா் லட்சுமி தமிழா் திருநாளின் சிறப்புகளை பேசினாா். அனைத்து பணியாளா்களுக்கான கோலமிடுதல், கயிறு இழுத்தல், பந்து விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவா்கள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் உள்ளிட்ட 175 பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. பின்னா் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகா்மன்ற உறுப்பினா்கள், பொறியாளா் முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், மேலாளா் பேச்சிக்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சிவா, மாதவராஜ், மாரியப்பன், சாமித்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

