தென்காசி
சங்கரன்கோவிலில் விவேகானந்தா் ஜெயந்தி விழா
சங்கரன்கோவிலில் விவேகானந்தா் சேவா டிரஸ்ட் சாா்பில், சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் விவேகானந்தா் சேவா டிரஸ்ட் சாா்பில், சுவாமி விவேகானந்தா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி, என்ஜிஓ காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு டிரஸ்ட் செயலா் சிவசுப்பிரமணியன், தொழிலதிபா் ராஜா, வழக்குரைஞா் சி. பவித்ரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில், சிவன், கண்ணன், பரத்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பாரத மாதா ஷாகாவை சோ்ந்த அருண், முகேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.